மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - சேலத்தில் ஓவிய ஆசிரியர் கைது


சேலம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியரை போக்சோ வழக்கில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சேலம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருபவர் சீனிவாசன். இவர் பள்ளியில் பயிலும் 8-ம் வகுப்பு மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக, மாணவிகள் பெற்றோரிடம் புகார் செய்தனர். இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் மல்லூர் போலீஸில் புகார் அளித்தனர்.

மல்லூர் காவல் ஆய்வாளர் பாலாஜி மற்றும் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உமா பிரியதர்ஷினி ஆகியோர் அரசுப் பள்ளி ஆசிரியர் சீனிவாசனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

x