மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மேலாநல்லூர் கீழத் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து(23). சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலை பார்த்து வந்த இவர், 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவருடன் பழகி, ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு, சென்னைக்கு அழைத்து சென்றுவிட்டார்.
இதுதொடர்பாக ஹெல்ப் லைன் எண் மூலம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்துக்கு தகவல் வந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்களால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் சிறுமியை மீட்டு, மாரிமுத்து மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.