புதுக்கோட்டை அதிர்ச்சி: அரிவாளுடன் கல்லூரிக்கு சென்ற மாணவர் கைது


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் செம்பட்டிவிடுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன் மகன் விநாயகமூர்த்தி(19). புதுக்கோட்டை மன்னர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் கல்லூரிக்கு அரிவாளுடன் சென்றுள்ளார். பின்னர், கல்லூரி வாசலில் அவர் அரிவாளுடன் நிற்பதாக கிடைத்த தகவலின்பேரில், நகர போலீஸார் அங்கு சென்று, விநாயகமூர்த்தியை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

தொடர்ந்து, இவருக்கும் கல்லூரியில் பயிலும் சில மாணவர்களுக்கும் இடையே இருந்த மோதல் காரணமாக, அந்த மாணவர்களை பழிவாங்கும் நோக்கில் அரிவாளைக் கொண்டு வந்திருக்கலாம் என விநாயகமூர்த்தியை போலீஸார் நேற்று கைது செய்தனர். கல்லூரிக்கு மாணவர் ஒருவர் அரிவாளுடன் வந்தது சக மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

x