விருத்தாசலம் கல்லூரி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை: இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது


வெங்கடேசன்

கடலூர்: விருத்தாசலம் கொடுக்கூர் நடுத்தெருவைச் சேர்ந்த வெங்கட் என்கிற வெங்கடேசன் (24) என்பவர் அவருடன் படிக்கும் கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றியுள்ளார்.

இதுகுறித்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வெங்கட் என்கிற வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவரின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையின்பேரில் ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார், குற்றவாளி வெங்கட் என்கிற வெங்கடேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் நேற்று முன்தினம் கடலூர் மத்திய சிறையில் உள்ள வெங்கட் என்கிற வெங்கடேசனிடம் உத்தரவு நகலை வழங்கினர்.

x