கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த எலவனாசூர்கோட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றின் அருகில் வசித்து வந்த டீக்கடை நடத்தி வரும் தண்டபாணி (57) என்பவர், அப்பகுதியில் 5-ம் வகுப்பு படித்து வரும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் எழுந்தது.
பாதிக்கப்பட்ட சிறுமி அவரது பாட்டியிடம் இதுபற்றி கூறியுள்ளார். இதையடுத்து உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிககப்பட்டது. புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தண்டபாணியை நேற்றுக் கைது செய்தனர்.
இதைப்போன்று அதே பகுதியில் பள்ளிக்குச் சென்ற 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியிடம், அதே பகுதியைச் சேர்ந்த முகமது யாகூப்( 58) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிறுமியின் உறவினர் அளித்துப் புகாரின் பேரில், முகமது யாகூப் மீது போக்சோ பிரிவின் வழக்கு பதிவு செய்து, அவரையும் கைது செய்தனர்.