விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது: எடப்பாடி அருகே அதிர்ச்சி


சேலம்: எடப்பாடி அருகே விவசாயத் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த விவசாயியை போலீஸார் கைது செய்தனர்.

எடப்பாடி ஊராட்சி ஒன்றியம் பக்கநாடு ஊராட்சிக்குட்பட்ட மதுர காளியம்மன் கோயில் அருகேயுள்ள வடக்கத்திக்காட்டைச் சேர்ந்தவர் கோபால் (60). இவருக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் விவசாய நிலத்தில் வெண்டைக்காய் பயிர் செய்து தற்போது அறுவடை முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில் வெண்டைக்காய் பயிர் செய்யப்பட்டுள்ள நிலத்தின் நடுவே கஞ்சா செடிகள் 3 அடி உயரம் வரை வளர்ந்துள்ளதாக பூலாம்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கஞ்சா செடியை வளர்த்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோபாலை பூலாம்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

x