அண்ணியை வெட்டிக் கொன்று தப்பிச் சென்றவருக்கு அடைக்கலம்: தம்பதி கைது


நத்தம் அருகே விளாம்பட்டியில், அண்ணியை வெட்டிக் கொன்று தப்பிச் சென்றவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக கணவன், மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே விளாம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் இவரது சகோதரர் லட்சுமணன். குடும்பத் தகராறு காரணமாக, அண்ணன் மனைவி சங்கீதாவை ஒரு வாரத்துக்கு முன்பு லட்சுமணன் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லட்சுமணனை தேடி வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே வலையபட்டியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, அங்கு சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதில், உறவினர்கள் சுரேஷை தங்கவைத்து தப்பிக்க உதவியது தெரியவந்தது. இதையடுத்து, சுரேஷுக்கு அடைக்கலம் கொடுத்த அவரது பெரியம்மா மகள் பரமேஸ்வரி (37), இவரது கணவர் சித்திரன் (39) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். சுரேஷ் தப்பிச்செல்ல பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

x