சிறுமி பாலியல் வன்கொடுமை: போக்சோவில் நத்தம் இளைஞருக்கு 50 ஆண்டுகள் சிறை


திண்டுக்கல்: போக்சோ வழக்கில் நத்தம் இளைஞருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் மகன் தர்மராஜ் (24). இவர், 2023ம் ஆண்டு ஒரு சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அச்சிறுமியை காணாமல் அவரது பெற்றோர், நத்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சிறுமியை மீட்ட போலீஸார், தர்மராஜை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி வாதாடினார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி சரண் நேற்று அளித்த தீர்ப்பில் தர்மராஜுக்கு பல்வேறு பிரிவுகளில் 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீஸார் சிறையில் அடைத்தனர்.

x