ராஜபாளையம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது


ராஜபாளையம்: சங்கரன்கோவில் விலக்கு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (45). இவர் இரவு வேலை முடிந்து நேற்று அதிகாலை 1 மணிக்கு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது கார்த்திகேயனை வழிமறித்த 3 பேர் செல்போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து வடக்கு மலையடிப்பட்டி பாஞ்சாலி ராஜன்(24), 15 மற்றும் 13 வயது 2 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர். பாஞ்சாலிராஜன் விருதுநகர் சிறையிலும், சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப் பட்டனர். பாஞ்சாலிராஜன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

x