திருச்செந்தூர்: மானாடு சுந்தரபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், திருச்செந்தூர் தாலுகா போலீஸார் சோதனை நடத்தினர்.
மானாடு சுந்தரபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வகுமார் (38) என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில், 3 பேர் கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர். போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற அவர்களை போலீஸார் சுற்றி வளைத்து பிடித்தனர். செல்வகுமாரும், அதே ஊரைச் சேர்ந்த ஜெயமுருகனும் (42) பிடிபட்டனர். சிவபெருமாள் என்பவர் தப்பி ஓடிவிட்டார். சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பாத்திரங்கள் மற்றும் மூலப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.