உரிமையாளர் வேலையை விட்டு நீக்கியதால் ஆத்திரம்: ஆலங்குளம் உணவகத்துக்கு தீ வைத்த 2 பேர் கைது


தென்காசி: ஆலங்குளம் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே பூலாங்குளத்தைச் சேர்ந்த சதீஷ் (26) என்பவர் துரித உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் கிராடகுளத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் (21), கருத்தபாண்டி (20), முத்துராமன் (20), ஆம்பூரைச் சேர்ந்த துரை ஆகியோர் வேலை பார்த்து வந்தனர்.

கடையில் பணம் கையாடல் பிரச்சினையால் இவர்கள் 4 பேரையும் வேலையில் இருந்து நீக்கிவிட்டு, வேறு சிலரை வேலைக்கு சேர்த்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவரது கடை தீப்பிடித்து எரிந்தது. ஆலங்குளம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று, தீயை அணைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதில், வேலையை விட்டு நீக்கப்பட்ட 4 பேரும் கடைக்கு தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆனந்தகுமார், முத்துராமன் ஆகியோரை கைது செய்த போலீஸார், மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.

x