புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: உதவி தலைமை ஆசிரியர் கைது


திருச்சி: போதாவூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், திருச்சி பாலக்கரை தர்மநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயராஜ் சூசைநாதன்(55) ஆசிரியராக உள்ளார்.

இவர், பிப்.13ம் தேதி வகுப்பறையை சுத்தம் செய்து கொண்டிருந்த 2-ம் வகுப்பு பயிலும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அச்சிறுமியின் தாய், குழந்தைகள் உதவிமைய எண் 1098-ஐ தொடர்பு கொண்டு தகவல் அளித்தார். அதைத் தொடர்ந்து, ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீஸில் நேற்று புகார் அளித்தார். இதன் பேரில், போலீஸார் நேற்று பள்ளிக்குச் சென்று ஆசிரியர் ஜெய ராஜ் சூசைநாதனைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகேயுள்ள ஒத்தப்புலிகுடியிருப்பு அரசு உயர்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் (57), பள்ளி மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் திருமயம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து பெருமாளை நேற்று கைது செய்தனர்.

x