தேனி அதிர்ச்சி: தங்களுக்கு எதிராக சாட்சி கூறியவர்களை கொல்ல திட்டமிட்ட 3 பேர் கைது


தேனி: ராயப்பன்பட்டி காவல் சார்பு ஆய்வாளர்கள் அருண் பாண்டி, கோதண்டராமன் தலைமையிலான போலீஸார் சின்ன ஓவுலாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கன்னிசேர்வைப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த பிரகாஷ் பாண்டியன் (24), ராஜ்குமார் (26), சின்ன ஓவுலாபுரத்தைச் சேர்ந்த பெருமாள் (26) ஆகியோர் பிளாஸ்டிக் பையை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தனர்.

அவர்களை சோதனை செய்ததில் 3 வாள்களை வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவர்கள் மீது கொலை வழக்கு இருப்பதாகவும், தங்களுக்கு எதிராக சாட்சியம் கூறியவர்களை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாள்களை வைத்திருந்தாகவும் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

x