மதுரை மருத்துவமனையில் சிகிச்சையிலுள்ள மானாமதுரை மாணவரிடம் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் விசாரணை


மதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தாக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலுள்ள பட்டியலின கல்லூரி மாணவரிடம் தேசிய எஸ்சி, எஸ்டி ஆணைய இயக்குநர் இன்று விசாரணை நடத்தினார்.

மானாமதுரை அருகே மேலப்பிடாவூரைச் சேர்ந்த ராமன் மகன் அய்யாச்சாமி (20). பட்டியலின கல்லூரி மாணவரான இவர் 2 நாளுக்கு முன்பு அவரது ஊருக்குள் டூவீலரில் சென்றார். அவருக்கும் அவ்வூரைச் சேர்ந்த வினோத்குமார் உள்ளிட்ட 3 பேருக்கும் தகராறு ஏற்பட்டதில் அய்யாச்சாமிக்கு கைகளில் அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக வினோத் குமார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் கல்லூரி மாணவர் அய்யாசாமியிடம் தாக்குதல் சம்பவம் குறித்து தேசிய எஸ்சி, எஸ்டி ஆணைய ஆணைய இயக்குநர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர் இன்று விசாரித்தனர். மாணவருக்கு அளிக்கும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் குழுவினர் கேட்டறிந்தனர்.

x