திருச்சி மாநகரில் போதை மாத்திரை, கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது: போலீஸார் நடவடிக்கை


திருச்சி: அரியமங்கலம் காமராஜர் நகர் பகுதியில் அரியமங்கலம் போலீஸார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்வதற்காக நின்றிருந்த காட்டூர் பாத்திமாபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த நசுருதீன் (24), காமராஜர் நகரைச் சேர்ந்த முகமது மஜீத் (23) ஆகியோரை போலீஸார் கைது செய்து, 20 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஃபயாஸ் (21) என்பவரை தேடி வருகின்றனர்.

அதேபோல, கஞ்சா விற்பனை செய்ததாக ரெட்டைமலை கோயில் அருகில் ராம்ஜிநகர் மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (52), இஆர் மேல்நிலைப் பள்ளி அருகில் கீழப்புலிவார்டு சாலை விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த எஸ்.ஹரிஹரன் (20), சையது முர்துஷா பள்ளி அருகில் தெற்கு தாராநல்லூர் காமராஜ் நகரைச் சேர்ந்த எச்.தர்மதுரை (21), காஜாப்பேட்டை செர்வைட் பள்ளி அருகில் பாலக்கரை முதலியார் சத்திரத்தைச் சேர்ந்த எஸ்.சுனில் (21) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

x