புதுச்சேரியைச் சேர்ந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (25), வேன் ஓட்டுநர். இவர் தினமும் பள்ளி மாணவ, மாணவிகளை வீட்டில் இருந்து பள்ளிக்கும், பள்ளியில் இருந்து வீடுக்கும் அழைத்து வரும் பணி செய்து வந்தார். இந்நிலையில் சுபாஷ் சந்திர போஸ் வேனில் பயணிக்கும் 14 வயது மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதனிடையே சுபாஷ் சந்திர போஸ் அந்த மாணவியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, பின்னர் வீட்டில் இறக்கி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளார். பெற்றோர் மாணவியிடம் விசாரித்த நிலையில் நடந்தவற்றை கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இச்சம்பவம் குறித்து கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுபாஷ் சந்திரபோஸை நேற்று கைது செய்தனர்.