கோவையில் நூதன திருட்டு: முகவரி கேட்பதுபோல நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு


கோவை: தொப்பம்பட்டி குருடம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி (66). இவர், நேற்று முன்தினம் தொப்பம்பட்டி தபால் காலனியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பெண்கள் முகவரி கேட்பது போல நடித்து, லட்சுமி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக லட்சுமி அளித்த புகாரின் பேரில் துடியலூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

x