காஞ்சிபுரம்: பிரபல நகை கடையில் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள வைர நகையை திருடிய பெண் நேற்று கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம், பல்லவர்மேடு பகுதியைச் சேரந்தவர் ரமாதேவி (48). இவர் காந்தி சாலையில் உள்ள கல்யாண் ஜூவல்லரி நகைக் கடைக்கு நகை வாங்குவதுபோல் வந்துள்ளார். அப்போது அவர் 9 கிராம் வைர பிரேஸ்லெட், 6 கிராம் மோதிரம், 6 கிராம் தங்க நகை ஆகியவற்றை திருடிச் சென்றார்.
இது தொடர்பாக கிளை மேலாளர் சீனுவாசன் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது ரமாதேவி திருடிச் சென்றது தெரிந்தது. இதனைத் தொடர்ந்து இவரை போலீஸார் கைது செய்தனர்.