ஜோலார்பேட்டை: மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பிஜேந்திர சிங் மேக்ரா (34). இவர், வாணியம்பாடியில் உள்ள திருமண மண்டபத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருடன், இவரது உறவினர் ரிங்கு சாகர் (34) மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் சிங்கார்க் (34) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், பிஜேந்திர சிங் மேக்ரா விடுமுறையை யொட்டி தனது சொந்த ஊருக்கு செல்ல கடந்த பிப்.11-ம் தேதி ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தார். அவரை, வழியனுப்ப அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் உடன் வந்தார். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் வரும் வரை நின்று பேசிக்கொண்டிருந்த இவர்கள் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு தகராறில் ஈடுபட்டனர்.
அப்போது சுராஜ் சிங்கார்க், பிஜேந்திர சிங் மேக்ராவை கல்லால் சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த பிஜேந்திர சிங் மேக்ராவை, ரயில் பயணிகள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை உயிரிழந்தார்.