திசையன்விளை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞர் கைது


திருநெல்வேலி: திசையன்விளை அருகே மகாதேவன்குளம் பகுதியில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக ஆறுமுகம் (27) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றது தொடர்பாக அவரது பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் ஆய்வாளர் கவுரி மனோகரி விசாரணை நடத்தி, ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

x