தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கடலையூர் வேத கோவில் தெருவை சேர்ந்தவர் எட்வர்டு (72). இவர் கோவில்பட்டி புதுரோடு பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்த 16 வயது பள்ளி மாணவியிடம் தவறாக நடக்க முயன்றார். மாணவி அளித்த புகாரின் பேரில், மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் எட்வர்டை கைது செய்தனர்.
இதுபோல், கடம்பூர் அருகே கே.கைலாசபுரம் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளி விடுதியின் சமையலராக துறையூர் ஆர்.சி.சர்ச் வடக்கு தெருவைச் சேர்ந்த ஏ.சுரேஷ் (42) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் விடுதி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஐசக் தேவராஜ் புகார் அளித்தார். கடம்பூர் மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து, போக்சோ சட்டத்தின் கீழ் சுரேஷை கைது செய்தனர்.