திருப்பூரில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் தொழிலாளி கைது


திருப்பூர்: 12 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த பனியன் தொழிலாளி கைதுசெய்யப்பட்டார்.

திருப்பூரை சேர்ந்தவர் சந்தோஷ் (29). பனியன் தொழிலாளி. இவர், 12 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

இதையறிந்த சிறுமியின் பெற்றோர், திருப்பூர் கொங்கு நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ வழக்கு பதிந்து சந்தோஷை நேற்று போலீஸார் கைது செய்தனர்.

x