சென்னை: மணிகண்டன் (30) என்பவர் செம்பியம் பகுதியில் குளிர்பான விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 11-ம் தேதி கடையில் இருந்த போது ஒருவர் மணிகண்டனை கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி பணத்தை பிடுங்கிச் சென்றார்.
இதுகுறித்து செம்பியம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். பணத்தை பிடுங்கி சென்றது வியாசர்பாடி கக்கன்ஜி காலனியைச் சேர்ந்த அவினாஷ் (23) என்பது தெரியவந்தது. அவினாஷை போலீஸார் கைது செய்தனர் அவினாஷ் மீது ஏற்கெனவே 2 குற்ற வழக்குகள் உள்ளதும். இவர் செம்பியம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.