வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகை பறிப்பு: தென்காசி அருகே சிறுவன் கைது


தென்காசி: சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மனைவி பொன்னம்மாள் (73). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் வீட்டுக்குள் புகுந்து, பொன்னம்மாள் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

சிவகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சிறுவனை கைது செய்து, சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.

x