திருமணம் செய்துகொள்ளுமாறு பிளஸ் 2 மாணவிக்கு மிரட்டல்: ஜெயங்கொண்டம் இளைஞர் போக்சோவில் கைது


அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே தன்னை திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தி பிளஸ் 2 மாணவியை மிரட்டிய இளைஞர் போக்சோ சட்டத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தண்டலை மேலத் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த் (29). இவர், பிளஸ் 2 பயிலும் 17 வயது மாணவி ஒருவரிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், “என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், உன்னையும் உன் பெற்றோரையும் தீயிட்டு எரித்து கொன்றுவிடுவேன்” என மாணவியை நேற்று முன்தினம் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஆனந்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

x