அரியலூரில் பரிதாபம்: விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்ததில் ஹோட்டல் உரிமையாளர் உயிரிழப்பு


ஹோட்டல் உரிமையாளர் அன்பழகன்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் அன்பழகன் (51). இவர் ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடத்தில் பாலாஜி பவன் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வந்தார்.

இந்நிலையில் இவர் இன்று காலை (பிப்.13) வீட்டில் இருந்து தனது காரில் ஹோட்டலுக்கு சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பு சுவற்றில் மோதியதில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் காரில் இருந்த அன்பழகனை மீட்க முயற்சித்துள்ளனர்.

இருப்பினும் காரின் கதவுகளை திறக்க முடியாததால், அன்பழகனை மீட்க முடியாத நிலையில் ஏற்பட்டது. மேலும் தீ கார் முழுவதும் பரவியதால் அன்பழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

x