தென்காசி: இலத்தூர் அருகே மதினாப்பேரி குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் மனித உடல் எரிந்த நிலையில் கிடந்ததை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் மற்றும் இலத்தூர் போலீஸார் சென்று, பார்வையிட்டனர். உடலில் மெட்டி இருந்தது கண்டறியப்பட்டது. அருகில் மது பாட்டில்கள் கிடந்தன.
அது பெண் உடல் என்பது தெரியவந்தது. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது. உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீஸார், உயிரிழந்த பெண் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.