சென்னை: பாரிமுனை பகுதியில் சகோதரிகளிடம் தகாத வார்த்தைகள் பேசி ஆபாச செயல்களில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்
இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்னை, பாரிமுனை, ஆதம் தெருவில் குடும்பத்துடன் வசித்து வரும் 36 வயது பெண்மணி ஒருவர் 10.02.2025 அன்று இரவு அவரது தங்கையுடன், வீட்டினருகே ஆதம் தெருவில நடந்து செல்லும்போது, அப்பகுதியைச் சேர்ந்த ஷேக் செய்யது அலி மற்றும் அவரது நண்பர் ஆறுபடை ஆகியோர், மேற்படி சகோதரிகளை வழிமறித்து ஆபாச வார்த்தைகளால் பேசி, தனது ஆடையை கழற்றி ஆபாசமாக நடந்துள்ளனர்.
மேலும், சகோதரிகள் நகர்ந்து செல்லும்போது, இருவரும் அடிக்க வந்தபோது, சகோதரிகள் இருவரும் சத்தம் போட்டு தப்பிச் சென்ற பின்னர் மேற்படி சம்பவம் குறித்து B-1 வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
வடக்கு கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட பாரிமுனை ஆதம் தெருவை சேர்ந்த அப்துல்லா மகன் ஷேக் செய்யது அலி (29) என்பவரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள ஆறுபடை என்பவரை பேலீசார் தீவிரமாக தேடி வருகின்றனார்.
கைது செய்யப்பட்ட எதிரி ஷேக் செய்யது அலி விசாரணைக்குப் பின்னர் நேற்று (11.02.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது