இளைஞரை கொன்று கடலில் வீசிய வழக்கு: புதுக்கோட்டையில் சிறுவன் உட்பட 2 பேர் கைது


புதுக்கோட்டை: மணமேல்குடி அருகே இளைஞரை கொலை செய்து, சடலத்தை கடலில் வீசிய சம்பவத்தில் சிறுவன் உட்பட 2 பேரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

மணமேல்குடி அருகே ஆதிப்பட்டினத்தில் கல்லைக் கட்டி கடலில் வீசப்பட்ட ஆண் உடலை கடந்த டிச.30ம் தேதி மீட்டு, மணமேல் குடி போலீஸார் விசாரித்து வந்தனர். அதில், இறந்தது புதுக்குடியைச் சேர்ந்த மீனவர் மாதவன் (40) என்பது தெரியவந்தது. மேலும், முன்விரோதம் காரணமாக அதே ஊரைச் சேர்ந்த காளீஸ்வரன் மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய 2 பேர் சேர்ந்து மாதவனின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, உடலில் கல்லைக் கட்டி கடலில் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து, காளீஸ்வரன், சிறுவன் ஆகிய 2 பேரையும் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

x