75 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: திருச்சியில் வாலிபர் கைது


திருச்சி: மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார் (40). இவர், மது அருந்திவிட்டு 75 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில், லால்குடி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முத்துகுமாரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

x