புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே கிளிக்குடி பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் கே.அடைக்கலம் (44). இவர், அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் மாணவிகளுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்கும்போது, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து உடற்கல்வி ஆசிரியர் அடைக்கலத்தை நேற்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.