சென்னை: சென்னை ராயப்பேட்டை முத்தையா இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராமானுஜம். இவர் சென்னை துறைமுக அலுவலகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரமா எல்ஐசி-யில் காசாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களின் மகள் சௌந்தர்யா. இவருக்கு திருமனம் ஆகி தனது கணவருடன் தனது பெற்றோருடன் வீட்டில் தங்களியுள்ளார்.
இந்நிலையில், இரவு நால்வரும் வழக்கம் போல வீட்டின் கதவை மூடிவிட்டு தூங்கியுள்ளனர். காலை எழுந்து பார்த்த போது படுக்கை அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டிருப்பதை கண்டு ரமா அதிர்ச்சி அடைந்தார். மேலும், பீரோவில் சோதனை செய்த போது அதில் இருந்த வளையல், செயின் உள்ளிட்ட 28 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரிய வந்தது.
இதனையடுத்து, கொள்ளை சம்பவம் குறித்து ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.