திருச்சி அதிர்ச்சி: ஓய்வுபெற்ற வங்கி ஊழியரின் வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு


திருச்சி: ஸ்ரீரங்கம் அடையவளஞ்சான் வீதியைச் சேர்ந்தவர் எம்.எஸ். கே.கேசவன்(65). ஓய்வுபெற்ற தனியார் வங்கி ஊழியர். இவர் கடந்த 28-ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு கும்பகோணம் சென்றார்.

பின்னர், நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் பணம் திருடுபோயிருந்தது. தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

x