ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே வாழவந்தாள்புரத்தைச் சேர்ந்த அழகுமலை மகன் அழகுராஜா (28). இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி கடமலைக்குண்டு அருகே மேலபூசனூத்து ஈஸ்வரன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்த புகாரின்பேரில், கடமலை-மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் மலர்கொடி விசாரணை நடத்தினார். பின்னர் குழந்தை திருமணம் நடந்ததாக, ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், அழகுராஜா, அவரது பெற்றோர், சிறுமியின் தாய் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, போலீஸார் விசாரிக்கின்றனர்.