தீர்த்தமலை அருகே மான் வேட்டை: 2 பேருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம்!


அரூர்: தீர்த்தமலை அருகே மான் வேட்டையாடிய 2 பேருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள வேப்பம்பட்டி காப்புக்காட்டில் வனவிலங்குகளை சிலர் வேட்டையாடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் உத்தரவின்படி தீர்த்தமலை வனச்சரக அலுவலர் கோகுல் தலைமையில் வனப்பணியாளர்கள் குழு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

அப்போது, காப்புக்காட்டில் கன்னிவலை வைத்து புள்ளிமானை வேட்டையாடி கொண்டிருந்த அம்மாபாளையம் கணேசன் (எ) சின்னதுரை, கீரைப்பட்டி புதூர் அசோக் ஆகியோரைப் பிடித்தனர். அவர்களுக்கு வனஉயிரின குற்றப்படி தலா ரூ.60 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார். தொடர்ந்து இருவரும் அபராதம் கட்டிய நிலையில் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

x