கோத்தகிரியில் பரபரப்பு: கடமானை வேட்டையாட சுருக்கு வைத்த மூவர் கைது!


கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கட்டபெட்டு வனச்சரகம் தட்டனை பகுதியில் சிலர் வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கட்டபெட்டு வனச்சரகர் செல்வகுமார் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, சுருக்கு வைத்து வேட்டையாட முயன்ற சதீஷ் குமார் (26), குமார் (27), பிரகாஷ் (30) ஆகிய மூவரை வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.

x