சென்னை | குட்கா பாக்​கெட்கள் வைத்​திருந்த 2 பேர் கைது


சென்னை: பெரியமேட்​டில் தடை செய்​யப்​பட்ட குட்கா பாக்​கெட்களை வைத்​திருந்த 2 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். சென்னை பெரியமேடு நேவல் ஆஸ்பிடல் சாலை கால்​பந்து மைதானம் அருகே பெரியமேடு போலீ​ஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்​டிருந்​தனர்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்​தில் சாக்கு பையுடன் வந்த அண்ணாநகரை சேர்ந்த ஜுல்​ஹஸ்னன் (38), காஞ்​சிபுரத்தை சேர்ந்த ஷகில் அகமது (36) ஆகிய 2 பேரை நிறுத்தி விசாரணை நடத்​தினர்.

சாக்கு பையில் தமிழக அரசால் தடை செய்​யப்​பட்ட 17.65 கிலோ குட்கா புகை​யிலை பாக்​கெட்கள் இருந்தது தெரிய​வந்​தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

x