கோவையில் பாஜக மாவட்ட தலைவர் கைது - காரணம் என்ன?


கோவை: திராவிடர் விடுதலை கழக நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் மற்றும் பல்வேறு இந்து அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

கோவை சிவானந்தா காலனியில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தமிழ் ஈழமும், திராவிட இயக்கமும் என்ற தலைப்பில் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி இந்நிகழ்வில் கலந்து கொண்டு கலந்துரையாடினார்.

இந்து கடவுள்களை இழிவாக பேசும் கொளத்தூர் மணியை கைது செய்ய வலியுறுத்தி இந்து அமைப்பினர் கருத்தரங்கு நடைபெறற்ற அரங்கின் முன்பு திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் 40-க்கும் மேற்பட்ட பல்வேறு இந்து அமைப்பினர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

x