திடீரென வலிப்பு; பின்னர் வயிற்றுப்போக்கு - மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் ஞானசேகரன்!


சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்​கில் கைதான ஞானசேகரனின் போலீஸ் காவல் முடிந்து அவர் மீண்​டும் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்​தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்​பட்​டார். அவரிடம் 7 நாள் காவலில் விசா​ரிக்க சைதாப்​பேட்டை நீதி​மன்றம் கடந்த 19ம் தேதி அனுமதி வழங்​கியது. கடந்த 21ம் தேதி விசா​ரணை​யின்​போது ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்​டது. அதேபோல் நேற்று முன்​தின​மும் வாந்தி, வயிற்றுப்​போக்கு ஏற்பட்​டது.

இதனால் அவர் ஸ்டான்லி அரசு மருத்​துவ​மனை​யில் இருமுறை சேர்க்​கப்​பட்​டார். பின்னர் உடல்​நலம் தேறிய நிலை​யில் மீண்​டும் விசாரணை தொடர்ந்​தது. இந்நிலை​யில், 7 நாள் போலீஸ் காவல் முடிந்த நிலை​யில், நேற்று அவரை சைதாப்​பேட்டை நீதி​மன்​றத்​தில் போலீ​ஸார் ஆஜர்​படுத்​தினர். இதனையடுத்து அவர் மீண்​டும் நீதி​மன்ற காவலில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

x