சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் செய்த பெண் கைது - ஒருவர் மீட்பு!


சென்னை: எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு பெண் மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை பெருநகர காவல், விபச்சார தடுப்புப் பிரிவு-2 (Immoral Traffic Prevention Unit, ITPU-2) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 23.01.2025 அன்று மதியம் எம்.ஜி.ஆர். நகர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தெருவில் உள்ள ஒரு வீட்டை கண்காணித்தபோது, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

அதன்பேரில், பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் மேற்படி இடத்தில் சோதனைகள் மேற்கொண்டு, அங்கு பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்திய காஞ்சிபுரம் மாவட்டம் மேடவாக்கம் ஜல்லடியன் பேட்டையை சேர்ந்த செல்வராஜ் மனைவி ரெஜினா (57) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த தங்க வைத்திருந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் மீட்கப்பட்டார்.

விசாரணையில் எதிரி ரெஜினா மேற்படி வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட எதிரி ரெஜினா விசாரணைக்குப் பின்னர் நேற்று (24.01.2025) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட பெண், அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x