விருதுநகர்: விருதுநகர் அருகே பள்ளி மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக பள்ளி ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறு பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளியில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வரும் மல்லாங்கிணறைச் சேர்ந்த ராஜ மாணிக்கம் (38) பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரையடுத்து, போலீஸார் போக்சோ வழக்குப்பதிவு செய்து பள்ளி ஊழியர் ராஜ மாணிக்கத்தை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.