ராமநாதபுரத்தில் கணவனை கூலிப்படை ஏவி கொல்ல முயன்ற மனைவி... வெளியான பகீர் தகவல்கள்!


கைதான கோட்டை ஈஸ்வரி

ராமநாதபுரம்: கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் அருகே அழகன்குளம் சாமித்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கொத்தனார் லட்சுமணன் (45), இவரது மனைவி கோட்டை ஈஸ்வரி (41). திருமணம் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

கோட்டை ஈஸ்வரி அங்குள்ள இறால் பண்ணையில் வேலை செய்த போது, அங்கு வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சக்திகுமார் பிஜி (31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், கோட்டை ஈஸ்வரி, பிஜிக்கு வீட்டில் உள்ள நகை, பணம் உள்ளிட்டவைகளை கொடுத்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கோட்டை ஈஸ்வரி, சக்திகுமார் பிஜியுடன் சேர்ந்து தொண்டி பகுதியைச் சேர்ந்த பிரதீபன் (30) மற்றும் கௌதம் (34) ஆகிய இருவருக்கு பணம் கொடுத்து கொத்தனார் லட்சுமணனை கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

இது குறித்து தேவிபட்டினம் போலீஸாருக்கு கிடைக்கவே, கோட்டை ஈஸ்வரி, பிரதீபன், கௌதம் ஆகிய மூவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான வடமாநில இளைஞர் சக்திகுமார் பிஜிவை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். தகாத உறவால் கணவனை கொலை செய்ய மனைவியே முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

x