பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: கரூரில் போலீஸ்காரர் போக்சோவில் கைது


கரூர்: 16 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த காவலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கரூர் மாவட்டம் அரங்கநாதன்பேட்டையைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவிக்கு, அதே பகுதியை சேர்ந்த காவலர் இளவரசன்(38) அடிக்கடி பாலியல் தொல்லை அளித்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி அவரது தாயிடம் தெரிவித்த நிலையில், மாணவியின் தாய் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலரிடம் இதுகுறித்து புகார் அளித்தார்.

இதுபற்றி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் இளவரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இளவரசன் கரூர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார், இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.


x