சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளியிடம் அத்துமீறிய போதை இளைஞர் கைது செய்யப்பட்டார். உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் அத்துமீறியதாக சதீஷ்குமார் என்பவர் கைதாகியுள்ளார்.
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 50 வயதுமிக்க பெண் ஒருவர் பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரிடம் திடீரென ஒரு நபர் மதுபோதையில் அத்துமீறியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த பெண் கத்தி கூச்சலிட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து தகவலறிந்த போலீசார், நோயாளியிடம் அத்துமீறிய நபரை கைது செய்தனர். இதனிடையே, கைது செய்யப்பட்ட நபரின் பெயர் சதீஷ் என்பதும், இவர் ராணிப்பேட்டையை சேர்ந்தவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.