சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறப்பு உதவி ஆய்வாளர் கைது


மதுரை: மதுரையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திடீர் நகர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) கைது செய்யப்பட்டார்.

திருப்பரங்குன்றம் கார்த்திகை திருவிழாவுக்கு, கடந்த டிச. 13-ம் தேதி பாதுகாப்புப் பணிக்கு சென்ற மதுரை திடீர்நகர் காவல்நிலைய சிறப்பு எஸ்.ஐ. ஜெயபாண்டி, 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், சிறப்பு எஸ்.ஐ. ஜெயபாண்டி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து, நேற்று அவரைக் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், ஜெயபாண்டியை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.

x