சென்னை | இளம்பெண் தற்கொலை வழக்கில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் கைது


சென்னை: இளம்பெண் தற்கொலை வழக்கில் தனியார் தொலைக்காட்சி ஊழியர் கைது செய்யப்பட்டார்.மேற்கு மாம்பலம், னிவாச பிள்ளை தெருவை சேர்ந்தவர் விஜயா (36). போரூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். இந்நிலையில், இவர்
சைதாப்பேட்டையில் வசிக்கும் தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் (45) என்பவரை காதலித்துள்ளார்.

பிரகாஷ் தனியார் தொலைக்காட்சியில் பணி புரிகிறார். காதலருக்கு, கார் வாங்க ரூ.1 லட்சம் மற்றும் நகை வாங்க ரூ.80 ஆயிரம் என விஜயா பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில், விஜயாவுடன் பேசுவதை பிரகாஷ் தவிர்த்துள்ளார். கடந்த 31-ம் தேதி போன் செய்த போது, ‘எனக்கு திருமணம் ஆகிவிட்டது.

இனிமேல் எனக்கு போன் செய்ய வேண்டாம்’ என பிரகாஷ் கூறியுள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த விஜயா, அன்றைய தினம் வீட்டிலேயே தீக்குளித்தார். இதையடுத்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட் டிருந்த அவர் கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார்.
இதுகுறித்து அசோக்நகர் போலீஸார் வழக்குப் பதிந்து புகாருக்குள்ளான பிரகாஷை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

x