சென்னை: சென்னையில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பெயின்டர் கைது செய்யப்பட்டார். புளியந்தோப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் மகள்களுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று அப்பெண் மூத்த மகளுடன் வெளியே சென்றிருந்தார்.
13 வயதுடைய இளைய மகள்வீட்டுக்கு வெளியே சக தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, பக்கத்து வீட்டுக்கு வந்திருந்த பெயின்டரான இளையராஜா (49) என்பவர் சிறுமி வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து, அவரிடம் நைசாக அழைத்து பேச்சுக் கொடுத்தார்.
பின்னர், ஆசை வார்த்தை கூறிதனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த அச்சிறுமி, தனது தாய் வீடு திரும்பியதும் நடந்த விபரீதத்தை கண்ணீருடன் தெரிவித்தார்.
உடனடியாக இதுகுறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் இளையராஜா அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ உட்பட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.