சென்னை | பாரில் இளம் பெண்களை வைத்து ஆபாச நடனம்: உரிமையாளர் உட்பட 3 பேர் கைது


சென்னை: ஜாபர்​கான்​பேட்டை, பிள்​ளை​யார் கோயில் தெரு​வில் தனியார் பார் ஒன்று உள்ளது. அங்கு இளம் பெண்களை வைத்து ஆபாச நடன நிகழ்ச்சி நடத்​தப்​படு​வதாக போலீ​ஸாருக்​குத் தகவல் கிடைத்​தது. எம்ஜிஆர் நகர் காவல் நிலைய போலீ​ஸார் சம்பந்​தப்​பட்ட பாருக்கு சென்று பார்​வை​யிட்​டனர்.

அப்போது, அரசு அனும​தித்த நேரத்தை மீறி பாரை நடத்​தி​யதும், அங்கு 3 பெண்கள் டிஜே இசைக்கு ஆபாசமாக நடனமாடிக் கொண்​டிருந்​ததும், அங்கிருந்த பார்​வை​யாளர்​கள், ரூபாய் நோட்டுகளை பெண்கள் மீது வீசிக் கொண்​டிருந்​ததும் தெரிய​வந்​தது.

இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து பார் உரிமை​யாளர் முகப்​பேரைச் சேர்ந்த தாணு(47), காசாளர் விருதுநகர் மாவட்​டத்​தைச் சேர்ந்த விஜய் அமிர்​த​ராஜ், நிகழ்ச்சி ஏற்பாட்​டாளர் ​வினோத்​(39) ஆகிய 3 பேரை கைது செய்​தனர்.

x