திருக்கழுக்குன்றம்: வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் 50 பவுன் தங்க நகை கொள்ளை


மாமல்லபுரம்: திருக்கழுக்குன்றம் அடுத்த பெரியகாட்டுப்பாக்கம் பகுதியில் கதவை உடைத்து 50 பவுன் தங்க நகை மற்றும் 15 கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சென்ற சம்பவம் அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த பெரியகாட்டு்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நரேஷ். இவர், புத்தாண்டு கொண்டாட்டமாக நேற்று வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றுள்ளார். இன்று காலை மீண்டும் ஊர் திரும்பிய வீட்டினுள் சென்று பார்த்த போது பின்னால் இருந்த கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தார். மேலும், உள்ளே சென்று பார்த்தப் போது பீரோ கதவை உடைத்து அதிலிருந்த 50 பவுன் தங்க நகைகளை மற்றும் 15 கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிவந்துள்ளது.

இது குறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸார், விரைந்து சென்று கொள்ளை சம்பவம் நடைபெற்ற வீட்டில் ஆய்வு செய்தனர். மேலும் கைரேகை உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். பின்னர் நரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

குடியிருப்புகளின் நடுவே உள்ள வீட்டில் கதவை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x