தாடிக்கொம்பு அருகே கூலித்தொழிலாளி கொலை: மூன்று சிறுவர்கள் கைது


கொலை செய்யப்பட்ட கூலித்தொழிலாளி காளீஸ்வரன்.

திண்டுக்கல்: தாடிக்கொம்பு அருகே கூலித்தொழிலாளியை குத்தி கொலை செய்த சிறுவர்கள் மூவரை போலீஸார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே காப்பிளிய பட்டியை சேர்ந்த விறகு வெட்டும் கூலித்தொழிலாளி காளீஸ்வரன் (24). செவ்வாய் கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த காளீஸ்வரனை சிறுவர்கள் மூன்று பேர் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதனிடையே வெளியே சென்ற காளீஸ்வரனின் மனைவி வீடு திரும்பிய போது கணவர் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தகலவறிந்து வந்த தாடிக்கொம்பு போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

போலீஸாரின் விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் பெண்கள் முன்னிலையில் மோசமான வார்த்தைகளால் பேசியதை காளீஸ்வரன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் காளீஸ்வரனை கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் சிறுவர்கள் மூன்று பேரை போலீஸார் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x